ஆளும் கூட்டணிக்குள் உக்கிர மோதல்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த காலம் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களின் உண்மையான பிரச்சினைகள் தற்போது சமூகமயப்பட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் ஐ.தே.கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகளை சமூகமயப்படுத்த முயற்சித்தவர்களின் உண்மையான பிரச்சினை சமூகமயப்பட்டு வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடைகளில் அழுது புலம்பி உரையாற்றுவதை காண முடிகிறது.

பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி மோதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் சில வேட்பாளர்களுக்கும் வியத் மக அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உக்கிரமான மோதல் உருவாகியுள்ளது. இந்த நிலையிலும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகளையே பேசி வருகின்றனர் எனவும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.