திருகோணமலை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய வேண்டும் என திருகோணமலை மக்களுக்கு திருமலை தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

திருமலை தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. ஆகக் குறைந்தது திருகோணமலை தமிழ் மக்களின் அடிப்படையான பொருளாதார பிரச்சினைகளைக் கூட அவரால் தீர்க்க முடியவில்லை.

திருகோணமலை தமிழ் மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டிய வேளை வந்திருக்கின்றது. காலம் வாய்ப்புக்களை தொடர்ந்தும் தராது என்பதை திருகோணமலை மாவட்ட மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

அரசியலால் ஒரு சமூகத்தை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியுமென்று ஒரு கூற்றுண்டு. அந்த ஆக்கமும் அழிவும் மக்களின் தீர்மானங்களிலேயே தங்கியிருக்கின்றது. சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, அரசியல் ஆக்கத்திற்கு துனைபுரியும் – தீர்மானங்கள் தவறாக இருந்தால், அது அழிவிற்கே வழிவகுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அறிக்கையில் தெரிவித்ததை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும் media_statement_.pdf