இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்க சீனா உறுதி

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.

இலங்கை,சீன ஒத்துழைப்பு கற்கை நிலையத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொடர்பான சீன நூல் ஒன்றில் சிங்கள மொழிப்பெயர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த நூலில் கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டும் என்று விடயங்கள் அடங்கியுள்ளமையால் இலங்கை மக்களுக்கு இது பெரும் நன்மையை பயக்கும் என்று சீன தூதரக பொறுப்பதிகாரி ஹுவெய் குறிப்பிட்டார்.

இந்த நூலில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான முழுமையான ஒழுங்குவிதிகள் தரப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனாவினால் சீனா பாதிக்கப்பட்டபோது இலங்கை காட்டிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு சீன மக்கள் இலங்கைக்கு உதவியளிக்க முன்வந்துள்ளனர் என்றும் ஹுவெய் குறிப்பிட்டார்.