இலங்கையின் நான்காவது பணக்காரரான கருணா! தமிழருக்கு என்ன செய்தார்?

Report Print Varunan in அரசியல்

அம்பாறை மாவட்டத்தை மீட்க வந்திருக்கின்ற முரளிதரனுக்கு தான் ஒரு விடயத்தை கூறுவதாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசிறில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் தவராசா கலையரசனை ஆதரித்து வீரமுனை கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அம்பாறை மாவட்டத்தை நீங்கள் மீட்க வேண்டுமாக இருந்தால் முதலில் நீங்கள் வெள்ளை வானில் கொண்டு சென்ற பெண்களையும், எங்கள் இளைஞர்களையும் விடுவியுங்கள்.

இரண்டாவதாக கருணா என்கின்ற பெயரோடு இந்த இலங்கையில் நான்காவது பணக்காரராக இருந்த நீங்கள் கொரோனா காலத்தில் மக்களின் பசியை தீர்த்திருக்கலாம்.

அதைக்கூட செய்யவில்லை. ஏனென்றால் உங்களுக்கு தப்புவதற்கு ஒரு ஆசனம் வேண்டும் என கூறியுள்ளார்.