கருணாவால் அம்பாறையில் பல பிள்ளைகள் அனாதைகளாக...!

Report Print Varunan in அரசியல்

கருணா என்ற துரோகிக்கு பின்னால் உங்கள் பிள்ளைகளை விட வேண்டாம் என அம்பாறை மாவட்ட மக்களிடம் பொத்துவில் பிரதேசசபையின் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்து இன்று சொறிக்கல்முனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கருணாவின் பிள்ளைகள் பாசிக்குடாவில் நீச்சல் உடையில் நிற்கின்றன. ஆனால் எங்களுடைய பிள்ளைகளின் நிலைமையை சற்று சிந்தித்து பாருங்கள்.

கருணா வீட்டிற்கு செல்லும் போது அப்பா என்று அவருடைய பிள்ளை வரும். ஆனால் இங்கு எத்தனையோ கொடூரமான கொலைகளை கருணா செய்துள்ளதால் அவர்களின் பிள்ளைகள் அப்பா இல்லாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.