துறைமுக நகருக்கு அருகில் மற்றுமொரு நகரம்

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகருக்கு அருகில் மீண்டும் கடலை நிரப்பி மேலும் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் கடலை நிரப்பி மற்றுமொரு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

உண்மையில் இந்த திட்டமானது 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டம். கடந்த 5 ஆண்டுகளாக இதனை செய்ய முடியாமல் போனது.

இதனால், நாங்கள் இந்த திட்டத்தை துரிதமாக ஆரம்பித்துள்ளோம். துறைமுக நகருடன் மற்றுமொரு நிலப்பரப்பை இணைத்து, இந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.

அதேபோல் அதனை சுற்றி பேர வாவியை அண்மித்த பகுதியையும் அபிவிருத்தி செய்ய உள்ளோம் எனவும் பிரியத் பந்து விக்ரம குறிப்பிட்டுள்ளார்.