புதிய அரசாங்கம் 11 ஆம் திகதி பதவியேற்கும்?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் புதன் கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்கும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினமே அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை பதவியேற்கும் முன்னர் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

அத்துடன் புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் புதிய உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார்.

எந்த கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், அரசாங்கம் பதவியேற்பது தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சியை அமைக் பேரங்களை பேச வேண்டும் என்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.