சுதந்திரக்கட்சியின் தலைமையை ஜனாதிபதிக்கு வழங்க சிலர் முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க அந்த கட்சியின் முன்வரிசை தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக ஏற்கனவே இவர்களுக்கு இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதால், இவர்கள் கோட்டாபய ராஜபக்சவை கட்சியின் தலைமைக்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை பெற கட்சியில் உள்ள சிலர் தயாராக இருக்கும் நிலையில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என்பதன் காரணமாக கோட்டாபய ராஜபக்சவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அழைக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமான நபர் கோட்டாபய ராஜபக்ச என்பதை அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என்பது இவர்களில் நிலைப்பாடாக உள்ளது.இதனடிப்படையில் மிக விரைவில் இந்த யோசனையை கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.