வீட்டுப் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் ஐ.தே.கட்சிக்கு வாக்களியுங்கள்: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

வீட்டுப் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் வாக்களிக்க வேண்டிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என அதன் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொறட்டுவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் டெனிம் காற்சட்டைகளை வழங்குவதாக கூறினேன். தற்போது இலங்கையில் டெனிம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெட்டியது, கிழிக்கப்பட்டது என அனைத்தும் கிடைக்கின்றன.

தற்போது நாட்டையும் அடகு வைக்க போகின்றனர். இறக்குமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாமல் போகும்.

இலங்கையில் செல்போன்களை தயாரிக்க முடியுமா?. ஹலோ சேர் என்றே கூற வேண்டியேற்படும். தலை கவசத்திற்கு பதிலாக டின் ஒன்றை தலையில் போட்டுக்கொள்ள நேரிடும்.

நாம் அந்த இடத்தை நோக்கி செல்லக் கூடாது. இந்த நாட்டை காப்பற்றக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மாத்திமே.

எம்மவர்கள் எமது காலை பிடித்து இழுத்தாலும் நாங்கள் ஓடுவோம். வீட்டுப் பொருளாதாரத்தை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களியுங்கள் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.