புதிய கட்சியை ஆரம்பித்தால் அந்த கட்சியை ஆரம்பித்தவர்களை வீதி, வீதியாக அலைய விட போவதாக தான் எப்போதும் கூறியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனது அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர்.
அப்போது நான் அவர்களை வீதியில் நடக்கவிடுவேன் என்று கூறியதை மாற்றி, தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சேறுபூசுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.