யாழ் - கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களிடம் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை விடுத்துள்ள கோரிக்கை

Report Print Gokulan Gokulan in அரசியல்
565Shares

கொழும்பு வாழ் தமிழர்கள் மனோகணேசனை ஆதரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள அவரது தனிப்பட்ட கருத்துக்கு தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உறுப்பினர்கள் தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் நேற்றையதினம் கொழும்பு - பம்பலப்பிட்டிய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒன்றுகூடலின் போது தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சி தொடர்பிலும் முக்கியமான பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

சிறீதரனின் கருத்து தனிப்பட்ட கருத்து

கொழும்பு வாழ் தமிழர்கள் முன்னாள் அமைச்சர் மனோகணேசனை ஆதரிக்க வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள அறிக்கை அவரது தனிப்பட்ட கருத்தென்றும், அது கட்சியின் முடிவல்ல என்றும் விவாதிக்கப்பட்டது. ஆயினும் அவரது கருத்துக்கு தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறீதரனின் குறித்த கருத்து தொடர்பில் தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

மேலும் கொழும்பில் வாக்குரிமை பெற்றுள்ள தமிழர்கள் தமது வாக்குகளை இம்முறை அளிக்காமல் தேர்தலை புறக்கனிப்புச் செய்வதே சரியானது என்றும் தமிழ் தேசியத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளவர்களுக்கும் அதைப் பலவீனப்படுத்த முயல்பவர்களுக்கும் கொடுக்கப்படும் சரியான படிப்பினையாக இருக்கும் என்றும் இக்கூட்டத்தில் பெரும்பாலான அங்கத்தவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை முன்வைத்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டுமென சில அங்கத்தவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். ஆயினும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு -கிழக்கு தமிழ் வாக்காளர்கள்

மேலும் இக்கூட்டத்தில் யாழ்.கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களும் மற்றும் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வாக்குரிமை பெற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியேயும் விசேடமாக கொழும்பு மாவட்டத்திலும் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்hகள் தமது வாக்கு எனும் ஆயுதத்தை பாவித்து தமிழர்கள் தேசியத்தை தனித்துவமாகப் பேணி நிலைநிறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர்களின் தெரிவாகும் அதைப் பலப்படுதர்துவதே எதிர்கால இருப்பிற்கும் உரிமைக்கும் உத்தரவாதமாக அமையும் தமிழ் மக்களாகிய நாம் அரசியல் சுதந்திரத் அரசியல் சமத்துவம் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக 1931ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக தந்தை செவ்வா காட்டிய பாதையில் தொடர் ந்து போராட்டங்களை நடாத்திவந்த நம்இனம் ஆயுதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டது.

2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெனிக்கப்பட்டுவிட்டது தற்பொழுது எங்களது கையில் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குச்சீட்டேயாகும் எங்கள் சமூகத்தின் நியாயமான எதிர்பார்ப்பை அந்த ஆயுதத்தை பயன்படுத்தியே எங்கள் இலக்கை அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற யாழ்- கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் அங்கே வாக்களிக்கும் அதேவேளையில் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வாக்குரிமை பெற்று வடக்கு -கிழக்கிற்கு வெளியே விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளர்கள் வடக்குக் கிழக்கிற்கு சென்று ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறயிருக்கும் தேர்தலில் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் வாக்காள பெருமக்களிடம் ஒருகோரிக்கையை முன்வைத்து ஒரு தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளையின் பொதுச் செயளாளர் சட்டத்தரணி ஆனோல்ட பிரியந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை கட்சியின் தலைவரும், யாழ் - கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜாவுக்கு யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி வாக்காளர்கள் முதல் வாக்கையும், ஏனைய இரு வாக்குகளையும் விரும்பும் ஏதாவதொரு வாக்காளருக்கு அளிக்க வேண்டுமெனவும் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளையால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.