நாளை நள்ளிரவுடன் முடிவடையும் தேர்தல் பிரச்சாரங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

நாளைய தினம் நள்ளிரவு முதல், பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது, தோட்டங்களில் கூட்டங்களை நடத்துவது, வீடுகளில் கூட்டங்களை நடத்துவது, வாக்கு சேகரிப்பதற்காக வீடு வீடாக செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, அலுவலங்களில் பதாகைகளை காட்சிப்படுத்துவது, சுவரொட்டிகளை ஒட்டுவது, தட்டிகளை காட்சிக்கு வைப்பது என்பன தடை செய்யப்படுகின்றன.

இம்முறை பொதுத்தேர்தல் எதிர்வரும் புதன்கிழமை அதாவது 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 225 நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட 25 அரசியல் கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்து 652 வேட்பாளர்களும், 313 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 3 ஆயிரத்து 800 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அதிகளவான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 924 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குறைந்தளவான வேட்பாளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அந்த மாவட்டத்தில் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக 12 ஆயிரத்து 894 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 773 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.