முதல் முறையாக குடும்பத்தை சாராத ஒருவருக்காக வாக்கு கேட்கிறேன் - ரோஹித்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்
845Shares

முதல் முறையாக தனது குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு வாக்களிக்குமாறு கோருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்தவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொலவத்த இம்முறை பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய நபர் எனவும் அவருக்கு விருப்பு வாக்கை வழங்குமாறும் ரோஹித்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற போது, வீட்டுக்கு வந்த தொலவத்த, எந்த சந்தர்ப்பத்திலும் எமக்காக குரல் கொடுப்பதாக கூறினார் எனவும் பிரதமரின் புதல்வர் குறிப்பிட்டுள்ளார்.