சஜித் அணியுடன் செயற்படும் மேலும் 200 பேரை நீக்குவது குறித்து ஆராயும் ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 200 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பதவிகளில் இருந்து நீக்குவது சம்பந்தமாக அந்த கட்சி ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் நெருக்கமாக செயற்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி 115 மக்கள் பிரதிநிதிகளை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வருவதன் காரணமாகவே அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.