கருணாவுக்கும், ஹாரிஸிற்கும், அதாவுல்லாவுக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசிறில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் தவராசா கலையரசனை ஆதரித்து வீரமுனை கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இன்று கருணாவுக்கும், ஹாரிஸிற்கும், அதாவுல்லாவுக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
ஹாரிஸ் சொல்கிறார் நான் கருணா என்று ஏசுவேன். நீ முஸ்லிம் என்று ஏசு. அதாவுல்லா தமிழர்கள் மடையர்கள் என ஏசுவாறாம் அப்போது அவருக்கு வாக்குகள் வருமாம்.
ஒப்பந்தமொன்றை செய்து விட்டு முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.