தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு

Report Print Ajith Ajith in அரசியல்
181Shares

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தமிழர்களுக்கும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளுக்கான தமிழ் மக்கள் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் சுதந்திர மக்களாக வாழ வேண்டும் என்ற ஆசையில் பல பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சசிப்புதன்மை மற்றும் சோதனைகளின் மத்தியில் தமிழர்கள்pன் முன்னோக்கி நகர்வில் குறைவு ஏற்படவில்லை என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சம உரிமைகளைப் பெறுவதற்கான அகிம்சை இயக்கம் வெற்றி பெறாத நிலையில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது,

இது இலங்கை அரசாங்கத்துடன்; 30 ஆண்டுகால உள்நாட்டுப் போராக நீடித்தது.

மே 2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்நோக்குடைய ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கவும்; தலைமைத்துவத்தை வழங்கியதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில், தமிழ் அரசியல் தலைமை தெற்கில் உள்ள மற்ற முற்போக்குவாதிகளுடன் விவேகத்துடன் ஒத்துழைத்ததுடன், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உலகளாவிய மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கியது.

துரதிர்ஷ்டவசமாக முன்னேற்றம், கஷ்டமாகவும் குறைவாகவும் இருந்தன. இந்த சிறிய முன்னோக்கு நடவடிக்கைகள் இலங்கை தமிழ் சமூகத்திற்கு அர்த்தமுள்ள நிவாரணத்தை அளிக்க போதுமானதாக இல்லை.

இலங்கையில் தற்போதைய அரசியல் கலாசாரத்தின் தனிச்சிறப்பை பொறுத்தவரையில் ஆட்சியில் சட்டத்துக்கு உரிய இடம் இல்லை. சமரசம் நீதித்துறை வீழ்ச்சி மற்றும் அடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம் மற்றும் நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் என்பவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பு எதிர்காலத்தில் ஒரு நியாயமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கான அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உகந்ததல்ல.

இலங்கையில் உள்ள தமிழர்கள் குறிப்பிட்ட அரசியல் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைக் கொண்டுள்ள ஆனால் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக உள்ளனர்.

அத்துடன் குறைந்த அளவிலான தேர்தல் வலிமையைக் கொண்டவர்களாகவும் உள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

எனவே தமிழ் வாக்குகள் பிளவுபடாமல் இருப்பது சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தாமல் இருப்பதற்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

ஆகவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் உள்ள மக்கள், சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கொள்கை ரீதியான மற்றும் சக்திவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஆர். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை, அபிலாஷைகளை கவனமாகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்தி வரும் கட்சி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கனேடிய தமிழ் காங்கிரஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பணியாற்றியுள்ளது.

எனவே அனைத்து தமிழ் மக்களும் தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை புத்திசாலித்தனமாக அளிக்க வேண்டும்,

இதன்போது தமிழ் சமூகத்தின் நீண்டகால நலனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரியுள்ளது.