மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் பிரேமலால் ஜயசேகர தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்
168Shares

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் கொலை செய்த சம்பவம் தொடர்பான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் சட்ட ரீதியாக எந்த தடைகளும் இல்லை என்பதால், அவருக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியான தீர்ப்பாக எவரும் கருதக் கூடாது. இலங்கையின் சட்டத்திற்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே இறுதி தீர்ப்பை வழங்க முடியும். இது ஆரம்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பான சாட்சியாளர்களின் நம்பகத் தன்மை தொடர்பான பிரச்சினையை நாங்கள் அடிப்படை பிரச்சினையாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுப்புவோம். இந்த தீர்ப்பினால், வேட்பாளருக்கு பிரச்சினை இருக்குமா என அனைவரும் எண்ணுகின்றனர். எந்த வகையிலும் இல்லை.

மேன்முறையீடு செய்த சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு தீர்ப்பு செல்லாது. இதனால், அவர் வேட்பாளராக போட்டியிடுவதில் சிக்கல் இல்லை.

வாக்களிக்கும் மக்களுக்கு பிரச்சினையில்லை. அவரது இலக்கத்திற்கு வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. அதனை எண்ணி அறிவிக்கும் கடமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

தேர்தலுக்கு பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என ஆணைக்குழு அறிவிக்கும் என நம்புகிறோம். இந்த வழக்கின் தீர்ப்பு தடையாக இருப்பது என்பதை தெளிவாக கூற வேண்டும்.

அவர் சிறையில் இருந்தாலும் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரவேண்டியது சிறைச்சாலையின் கடமை. இதனால், எந்த பிரச்சினைகளும் இல்லை. ஏனைய தேர்தல்களை விட இம்முறை அவருக்கு விருப்பு வாக்குகளை வழங்குங்கள் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.