சஜித் தலைமையின் கீழ் பணியாற்ற தயக்கமில்லை: நவீன்

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாச மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருவார் என்றால், அவரது தலைமையின் கீழ் தொடர்ந்தும் பணியாற்றுவது சம்பந்தமாக தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நான் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை கூறுகிறேன். சஜித் பிரேமதாச மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தால், அவருக்கு கீழ் பணியாற்ற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இதனை நான் தெளிவாக கூறுகிறேன்.

காமினி திஸாநாயக்க கட்சியில் இருந்து விலகிச் சென்று மீண்டும் வந்தார். எவரும் தலைமைத்துவத்திற்கு வர முடியும். அதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.