ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இரண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோருக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை பெற வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.