அரசாங்கத்திற்கு நாட்டை விற்கும் தேவையே இருக்கின்றது - மைத்திரிக்கு முதுகெலும்பு இருந்தது! ஞானசார தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்
508Shares

நாட்டில் உள்ள பெறுமதியான வளங்களை விற்பனை செய்து சாப்பிடுவது கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கத்தினதும் கொள்கையாக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று துறைமுகத்திற்கு சென்றிருந்த போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க கடந்த அரசாங்கம் தயாரான போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்து நிறுத்தினார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இதனை தடுக்க முதுகெலும்பு இருந்தது.

சிறிய துண்டுகளாக விற்பனை செய்யாமல், முழு துறைமுகத்தையும் விற்பனை செய்து விடுமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம். ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு பகுதியை விற்பனை செய்கிறது. மற்றுமொரு அரசாங்கம் பதவிக்கு இன்னுமொரு பகுதியை விற்பனை செய்கிறது. இறுதியில் ஒரே விதமாக விற்று சாப்பிடுகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை தயார் செய்திருந்ததை நாங்கள் அறிவோம். எப்படி இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தது. எதிர்ப்பு குரல்களுக்கு செவி கொடுத்து மறைமுகமாகவேனும் அதனை தடுத்து நிறுத்தினர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார். இவர்கள் எந்த அளவுக்கு அறிவற்றவர்களாக இருக்கின்றனர்? எனவும் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.