அதிகாலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்குமாறும் வதந்திகளுக்கு ஏமாறாது, வாக்குரிமையை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை கடற்கரை பூங்காவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் இறுதித் தேர்தல் பிரசார தினமான இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும் பிரதமர் தலைமையில் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு வந்தது, எதிர்கால சந்ததிக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து விட்டு, கொழும்பு தப்பியோடிய தலைவர்கள் இருக்கும் இப்படியான காலத்தில் கிராமத்தை கைவிடாது கிராமத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள்.
69 லட்சம் மக்கள் அனுமதி வழங்கிய சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக் கூடிய அணியை இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது அவசியம்.
வேலை செய்ய தயாராக இருக்கும் ஜனாதிபதிக்கு வேலையை செய்யக் கூடிய, அது தொடர்பான புரிதல் உள்ள அணியே தேவை.
சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானம் காரணமாக சூரியவெவ தற்போது முழு உலகத்திற்கும் அறிமுகமான நகரமாக இருக்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த மைதானத்தில் எவ்வித சர்வதேச போட்டிகளையும் நடத்த இடமளிக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.