நான்கு மாவட்டங்கள் சர்வதேச இணைக்கும் மத்திய பொருளாதார நிலையங்களாக மாற்றப்படும்: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வதேச இணைக்கும் மத்திய பொருளாதார நிலையங்களாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ள நான்கு பெரிய நகரங்களில் ஹம்பாந்தோட்டை மாவட்டமும் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கு இந்த நான்கு நகரங்களுக்குள் அடங்கும். இந்த நான்கு நகரங்களிலும் துறைமுகம், விமான நிலைங்களை கேந்திரமாக கொண்டு ஆங்கில சீ எழுத்து வடிவிலான பொருளாதார பிராந்தியத்தை உருவாக்கி, சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் நாட்டை உருவாக்க போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அந்த மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.