தேர்தலில் வெற்றிபெறும் வடக்கு கிழக்கு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை பொறுப்புகளை ஏற்கும்? சுரேன் ராகவன்

Report Print Murali Murali in அரசியல்

பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் வடக்குகிழக்கு கட்சிகள் புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி, பொது தேர்தலின் பின்னர் வடகிழக்கு அரசியல் பாரியமாற்றத்தை காணும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தனது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கம் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் குடிநீர் திட்டங்கள் விமானநிலையத்தை தரமுயர்த்துவது போன்ற போன்ற அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்காரணமாக வடபகுதி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞானங்களில் அபிவிருத்திதிட்டங்களை இணைத்துகொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலின் பின்னர் வடக்குகிழக்கு கட்சிகள் அரசாங்கத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அமைச்சரவை பதவிகளை ஏற்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளார்.