தீவிரவாதத்தின் உரத்த மற்றும் வன்முறைச் சத்தங்கள் சிறந்த செய்திகளை உருவாக்குகின்றன! மங்கள சமரவீர

Report Print Ajith Ajith in அரசியல்

அமைதியான பெரும்பான்மையினரின் ஜனநாயக அறிவிப்புகளை விட தீவிரவாதத்தின் உரத்த மற்றும் வன்முறைச் சத்தங்கள் சிறந்த செய்திகளை உருவாக்குகின்றன என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு பொருளாதார, மத அல்லது சமூக அரசியல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சவால்களை எதிர்கொள்ள தேவையான மதிப்புகளை வழங்கமுடியாத, முற்றிலும் தோல்வியுற்ற ஒரு கல்வி முறையே காரணமாக அமைந்துள்ளது.

முன்னோடியில்லாத வகையில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை இலங்கை இன்று எதிர்கொண்டு வருகின்றது.

இந்தநிலையில் இலங்கையை ஒரு செங்குத்துப்பாதையின் விளிம்பில் படுகுழியில் இருக்கும் ஒரு தேசத்தைப் பார்ப்பது போன்று பார்ப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையர்கள் அனைவரும்அர்த்தமுள்ள தேர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயக சிந்தனையுள்ள மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.