இதுவே விருப்புத்தெரிவு வாக்களிப்பு முறையைக்கொண்ட இறுதி தேர்தல்? ரணில் நம்பிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

விருப்புத்தெரிவு வாக்களிப்பு முறையைக்கொண்ட இறுதி தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த பொது தேர்தலாகவே இருக்கும் என்று தாம் நம்புவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விருப்பு தெரிவு அற்ற கலப்புமுறை தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் தொகுதிமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர அனைவரும் செயற்படவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுகொண்டுள்ளார்.

இன்று தமது வாக்கை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் இந்த கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.