கடந்த கால தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்காத மகிந்த! வசந்த பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை என்றால், அதனை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளப் போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறியதாவது,

இந்த கருத்தை பிரதமர் உண்மையாக கூறியிருந்தால், நாங்கள் மிகவும் கவலையடைவோம். இதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்படுவார்கள்.

மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்காவிட்டால், தாம் அதனை உருவாக்கிக்கொள்ள போவதாக கூறியிருப்பது பாரதூரமான கருத்து.

கடந்த கால தவறுகளில் இருந்து பிரதமர் பாடம் கற்கவில்லை என நாங்கள் எண்ணுகிறோம்.

ரணில், சஜித், சம்பந்தன் எந்த அணியின் உதவியை பெற்று தேசிய அரசாங்கத்தை அமைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொண்டாலும், அந்த பலம் இறுதியில் பிரிவினைவாத சக்திகளின் தேவைக்காக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மகிந்த ராஜபக்ச மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரினால், அதனை கொண்டு செய்ய போவது என்ன என்பதை கூறவில்லை.

தற்போது மக்கள் மீது குற்றம் சுமத்தி விட்டு, எதிரியிடம் இரையாவது பாரதூரமான தவறு எனத் தெரிவித்துள்ளார்.