ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் பெரும்பான்மையை பெரும் பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

வெளியாகி வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 154 ஆசனங்களை கைப்பற்றும் என அந்த கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை தழுவி வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் அந்த கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழப்பார் எனவும் பேசப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய பலப்பிட்டிய, ஹிரியால, அக்மீமன தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 70 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி தென் மாகாணத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்திலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்திலும் உள்ளன.