தோல்வியை ஏற்றுக்கொள்ளும் சஜித் அணி! பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தமது கட்சி புதிய கட்சி என்ற வைகயில் தேர்தல் முடிவுகள் தமக்கு மகிழச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியாக தமது பொறுப்பினை உரிய வகையில் முன்னெடுப்போம் என்றும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இந்நிலையில் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாக முன்னரே ஐக்கிய மக்கள் சக்தி தமது தோல்வி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.