நல்லை ஆதினத்தில் ஆசிபெற்ற சிறீதரன்

Report Print Suman Suman in அரசியல்
202Shares

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசிபெறுவது மற்றும் ஆலய வழிபாடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில்,

இன்று காலை நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதினத்தில் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றதுடன், நல்லைக் கந்தன் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்டு, அதிகூடிய வாக்குகளாக 35,884 வாக்குகளை பெற்று நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.