மீண்டும் சபாநாயகராகும் சமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் 9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட உள்ளதுடன் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட உள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

சமல் ராஜபக்ச கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவி வகித்தார். அத்துடன் தினேஷ் குணவர்தன, சபை முதல்வராக பதவி வகித்தார்.

கயந்த கருணாதிலக்க நல்லாட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக பதவி வகித்துள்ளார்.