தமிழரசு கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்! சிறீதரன்

Report Print Yathu in அரசியல்
506Shares

தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்க தயார் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசு கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் என கூறுவது பொருத்தமற்றது.

தமிழரசு கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமை பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

அனைத்து உறுப்பினர்களும், மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி இன்னொருவரது பதவியை பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.