நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை வாழ்த்தும் முன்னாள் சபாநாயகர்

Report Print Steephen Steephen in அரசியல்
232Shares

புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் “கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்” என அழைப்பதற்காக கௌரவத்தை சம்பாதிக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்ளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

முதன் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். எந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் நாடாளுமன்றம் தொடர்பாக பொது மக்களின் நிலைப்பாட்டை மேம்படுத்தவும் இது சந்தர்ப்பமாகும்.

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுவதற்கான கௌரவத்தை புதியவர்கள் சம்பாதிக்க வேண்டும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.