மட்டக்களப்பில் தமிழ் தேசியம், அபிவிருத்தி சார்பானவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி

Report Print Rusath in அரசியல்
319Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தமிழ் தேசியம் சார்பான இருவரும், அபிவிருத்தி சார்பாக இருவரும் தெரிவு செய்யப்பட்டது என்பது வரலாற்றில் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை அளித்து விரும்பியவர்களை வெற்றி பெற வைத்து, விரும்பாதவர்களைத் தோற்கவைப்பதற்காக ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தியமைக்காக மக்களுக்கு நான் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல மொழி, பல கலாச்சாரங்கள் கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கொரோனா அச்சத்திற்கு மத்தில் தேர்தல் அலுவலகம், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், மிகவும் சிறப்பான முறையில் தேர்தலை வழிநடத்திச் சென்று நல்ல முறையில் தேர்தலை நடத்திமுடித்த அனைவருக்கும், எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம்முறை தமிழ் மக்கள் அதிகளவு வாக்குகளை அளித்து 4 தமிழ் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது என்பது பாராட்டத்தக்கது என்பதோடு, தமிழ் மக்கள் தமது வலியை உணர்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்த தேர்தலின் மூலம் 75 வீதம் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை எமது மக்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.

இம்முறை தமிழ் தேசியம் சார்பான 2 பேரும், அபிவிருத்தி சார்பாக 2 பெரும் தெரிவு செய்தது என்பது வரலாற்றில் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பத்தை தெரிவு செய்யப்பட்ட நால்வரும் தங்களுக்குள் கொள்கை, கட்சி ரீதியான வேறுபாடுகள் இருப்பினும் மட்டக்களப்பு மக்களின் முன்னேற்றம் கருதி செயற்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 4 பிரதிநிதிகளுக்கும் மக்கள் சார்பாக எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாகவிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்து வந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் அங்கு ஒரு பிரதிநிதி தெரிவு செய்ப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் கட்சி மாறியதன் பின்பு. 2015 பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டடிருந்தார். ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலின் மூலம் எந்தவொரு தமிழரும் தெரிவு செய்யப்பட்டடிருக்கவில்லை.

இதற்கு விநாயகமூர்த்தி முரளிதரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிலரது செயற்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட மக்களிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கு அவர்கள் மறுதலிக்கக்கூடாது.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்திற்கும் சேவை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு செயல் வடிவத்தைக் கொடுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் கட்சி பிரதிநிதித்துவம் பிரச்சினை அல்ல. அங்கு தமிழர் பிரதிநிதி பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற வரையறைக்குள் இருந்த அம்மாவட்டத்தில் முரளிதரன் சென்று அங்கிருந்த வாக்குகளைப் பிரதித்தது என்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கலங்களை விட தற்போது வாக்கு குறைந்திருப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் மன்னிப்புக்கேட்டு, தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர்காலத்தில் அந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு செயற்படுவதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

அதுபோன்று தெரிவு செய்யப்பட்டுள்ள 4 பிரதிநிதிகளும், விகிதாசார அடிப்படையில் உள்ள தமிழ் தேசியத்தையும், விகிதாசார அடிப்படையிலுள்ள அபிவிருதிகளையும் அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அந்த நால்வரிடமும் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருந்திக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை வடக்கு - கிழக்கில் மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனைக் கண்டு திருந்த வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் இருக்கின்றது. எனவே தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மாவட்ட மக்களின் நலன்களைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு அவர்கள் அமையவிருக்கின்ற நாடாளுமன்றத்தினூடாக அவர்கள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

மக்கள் வழங்கி ஆணைக்கு மதிப்பது சிறுபான்மை மக்களின் தேவைளை நிறைவேற்ற வெண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது.

தேர்தலுக்கு முதல் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் என்பவருக்கு எதிராக அவதூறான துண்டுப்பிரசுரங்களை தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் போட்டிருந்தர்கள்.

ஒரு கட்சிக்கு இவ்வாறு செயற்படுவதென்பது ஒரு நாகரீகமற்ற செயற்பாடாகும். இவ்வாறான செயற்படுகளை நிறுத்த வேண்டும். எழுதுவதில் நாகரீகம் இருக்க வேண்டும். ஆனால் எந்தவித சமூக நோக்கமும் இல்லாமல் செயற்படுவதை நிறுத்த வேண்டும்.

அதற்குத்தான் மக்கள் தமது வாக்குப பலத்தைக் காண்பித்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் 3 தவறுகள் இருந்தன. முதலாவது: வேலைகயைத் திறனாகச் செய்யக் கூடிய திறன் அவர்களிடத்தில் இல்லை.

இரண்டாவது: இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவம் இல்லை, மூன்றாவது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்படும் முடிவுகளாகும். இவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

எனவே கிழக்கு மாகாணத்திதைப் பொறுத்தவரையில் கட்சி அரசியல் சரிவராது தமிழர் பிரதிநிதித்துவம்தான் சரிவரும் என்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.

வடக்கு - கிழக்கில் தமிழ் தேசியகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உயிர் தியாகம் செய்த இனம் தமிழினம். இது விலை மதிக்க முடியாத தியாகம் அந்த தியாகத்தை வைத்துக் கொண்டு தமிழ் தேசியத்தை விட்டு விட்டு விட முடியாது.

எனவே தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியம் இறந்து போகாமலும், அபிவிருதியில் நாட்டமுள்ளவர்களாகவும் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.