பொதுத்தேர்தலை நேர்மையான தேர்தலாகக் கருதவில்லை: சம்பந்தன்

Report Print Kanmani in அரசியல்
407Shares

பொதுத்தேர்தலை நேர்மையான தேர்தலாகக் கருதவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெரும்பான்மைக் கட்சிகள் மூலம் மக்களுக்கு பணம், மதுபானம் போன்றவை விநியோகிக்கப்பட்ட காரணத்தால், இந்தத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை.

சின்ன சின்ன தமிழ் கட்சிகள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தன. இதனால் தான் நாங்கள் கூடுதலான வாக்குகளைப் பெறவில்லை.

கடும் முயற்சி எடுத்ததன் நிமித்தம் நாங்கள் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம். அதை பெறும் வெற்றியாகக் கருதுகின்றோம்.

இப்படியான சூழலில் இந்த தேர்தல் நடந்ததைக் கண்டிக்கின்ற அதே நேரத்தில், எமது வெற்றிக்காக உழைத்தவர்களை நாங்கள் மதிக்கின்றோம். 20 ஆசனங்கள் பெறாவிட்டாலும் கூட எமது கட்சி தான் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன மிகத் தீவிரமாக ஈடுபட்டதாகவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.