புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம்! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Report Print Vethu Vethu in அரசியல்

2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

1981 இன் முதலாம் இலக்க நாடாளுமன்ற சட்டத்தின் 62 வது சரத்திற்கு அமைய குறித்த 196 உறுப்பினர்களையும் மக்கள் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 17 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.