ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் 100 வீத ஆதரவு: சுதந்திரக்கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமாக செயற்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்காக இன்று கட்சியின் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இதற்கு தலைமை தாங்கினார்.

இந்தநிலையில் கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த தயாசிறி ஜெயசேகர, தமது கட்சி நாடாளுமன்ற செயற்பாடுகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 100 வீத ஆதரவை ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் வழங்கும் என்று தெரிவித்தார்.