நாளை மறுதினம் கடமைகளை பொறுப்பேற்கும் பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுபேற்க உள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளராக அவர் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் உள்ள வைபவ மண்டபத்தில் சுப நேரத்தில் பதவியேற்க உள்ளனர்.