கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் அறிவிப்பு! மாவைக்கு ஆதரவாக யாழில் அவசர கூட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனத்தை தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் யாழில் அவசர கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசரமாக கூடியுள்ளனர்.

அத்துடன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுத்துள்ளனர்.

மேலும், பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.