தேசிய பட்டியல் விவகாரம்! சஜித் அணிக்குள் கடும் நெருக்கடி

Report Print Murali Murali in அரசியல்

தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இது குறித்த இறுதி முடிவு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இறுதி முடிவில் சிக்கல் ஏற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் தனித்து செயற்படும் என அறிவித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில், தேசிய பட்டியல் விவகாரத்தில் விளையாடக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடிதேசிய பட்டியலை நியமிக்கவில்லை என்றால், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 15 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று இரவு நடைபெற்றது, இறுதி முடிவு நாளைவரை மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.