ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டும் மோதல்! தடுமாறும் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால தலைவர் பதவி தொடர்பில் மீண்டும் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியின் எதிர்கால தலைவர் பதவிக்காக நவீன் திஸாநாயக்க மற்றும் ருவண் விஜேலர்தக ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கும் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவருக்கு கட்சி தலைவராக முடியாதென்பதனால் அந்த பிரச்சினை தீரும் வரை தான் கட்சி தலைமை பதவியில் நீடிப்பதாக ரணில் கட்சியின் பிரபலங்களிடம் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கும் நிலையில் கட்சியின் தலைமையத்திற்காக நவீன் திஸாநாயக்க மற்றும் ருவன் விஜேவர்தன ஆகிய உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால் கட்சியில் நெருக்கடி ஏற்படும் என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய குறித்த இருவரும் இந்த பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளும் வரை தான் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருப்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.


you may like this video