அதிக விரும்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பேராசியர்கள்!

Report Print Vethu Vethu in அரசியல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தெரிவான உறுப்பினர்களில் அதிக வாக்குகளை பெற்ற மூவர்கள் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வாக்குகளை பெற்றவர்களில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியிட்ட பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவாகியுள்ளார். அவர் 325,479 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாவதாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவாகியுள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகும். அவர் 141,991 வாக்குகளை பெற்றுள்ளார்.

புதியவர்களில் மூன்றாவதாக அதிக வாக்குகளை பெற்றவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வைத்தியர் ஜயசுமன என்பவராகும். அவர் 133,980 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.