தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பான இன்று தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தமது அமைப்பின் குழு உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள் என அதன் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் தேசிய பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடி தீர்மானிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த பதவி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.