தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஞ்சன் ராமநாயக்க தனது தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

தேர்தலுக்காக தனக்கு 55 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் அதில் 41 லட்சம் ரூபாய் தனக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய நன்கொட எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் 5 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஞ்சன் கூறியுள்ளார்.

தேர்தலில் செலவான தொகுதியல் 9 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தனது தனிப்பட்ட பணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள தேர்தல் செலவுகளில் அதிகமான பணம் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விளம்பரத்திற்காக 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலும் ரஞ்சன் விளம்பரம் செய்திருந்தார்.

தனது தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.