சுமந்திரனா த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர்?

Report Print Gokulan Gokulan in அரசியல்

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளராக கடந்த காலத்தில் சுமந்திரன் செயற்பட்டுவந்தது யாவரும் அறிந்ததே.

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற கோதாவில் சில மாதங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய கருத்துக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளினாலும் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் நீக்கப்படவேண்டும் என்ற அழுத்தம் பங்காளிக் கட்சிகளாக தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் புளொட் தலைமைகளினால் பலமான முறையில் பிரயோகிக்கப்பட்டு வந்தது.

சுமந்திரனை பேச்சாளர் பதிவியில் இருந்து அகற்றவேண்டும் என்ற முடிவும் கட்சிகளின் தலைமைகளினால் எடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் காலமென்பதால் அந்த முடிவு நடைமுறைப்படுத்துவது தள்ளிப்போடப்பட்டது.

ஆனால் கடந்த 7ம் திகதி ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆரை மணிநேரம் பேசியிருந்ததும், கட்சியின் முக்கியஸ்தர்களை மறைமுகமாக திட்டியிருந்ததும் யாவரும் அறிந்ததே.

சுமந்திரனை பேச்சாளர் பதவியில் இருந்து அகற்றவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்த த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும், இந்தச் சம்பவம் நடைபெற்று4 நாட்களாக மௌணம் காப்பதானது, சுமந்திரன் தொடர்பான பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

  • கூட்டமைப்பின் பேச்சாளராகத் தொடர்வதை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றனவா?
  • சிங்கள ஊடகத்திற்கு கூட்டமைப்பின் பேச்சாளர் ஸ்தானத்தில் இருந்து சுமந்திரன் வழங்கிய கருத்துக்களை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனவா?
  • தேசியப்பட்டியல் உறுப்பினர் பதிவியை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியது தொடர்பாக அடித்துப்பிடித்து கண்டன அறிக்கை வெளியிட்ட பங்காளிக் கட்சிகள், சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளராக தன்னை தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதை சகித்துக்கொண்டு மௌணம் காப்பது ஏன்?

கூட்டமைப்பில் உட்கட்சி ஜனநாயகம் அறவே இல்லாமல் ஆக்கியதற்கான பொறுப்பை வெறுமனே சம்பந்தர், சுமந்திரன் மீது போடுவை விடுத்து, கட்சிக்குள் நடக்கு அநீதிகளை தட்டிக் கேட்காமல் மெணம் அனுஸ்டிக்கும் பங்காளிக் கட்சிகளும் அந்த பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.