மேர்வின் சில்வாவின் புதல்வரை கைது செய்ய தயாராகும் பொலிஸார்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவை கைது செய்யும் நோக்கில் தலங்கமை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பொலிஸார் அங்கு சென்ற போது மாலக சில்வா வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி கேட்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மாலக சில்வாவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.