வாக்கு எண்ணும் நடவடிக்கையில் அநீதி! மஹிந்த அணியை சேர்ந்தவர் குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளை எண்ணும் போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சனி ரோஹன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை காரணமாக பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்கு பட்டியலில் தான் 10 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறி அவர் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

விருப்பு வாக்குகளை எண்ணும் போது தனக்கு ஏற்பட்ட அநீதி காரணமாக தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்ததாக, இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் செய்துள்ள முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் போது தமது வெற்றி வாய்ப்புகள் தடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தனர்.