சமாதான செயற்பாடுகள் வெற்றியடைந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: சொல்ஹெய்ம்

Report Print Steephen Steephen in அரசியல்

அன்றைய இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய தானும் சமாதான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியவர்களும் செயற்பட்டதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அந்த சமாதான செயற்பாடுகள் வெற்றியடைந்திருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என தனது டுவிட்டரில் பக்கத்தில் டுவிட் ஒன்றுக்கு பதிலளித்துள்ள சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் இருந்து எமக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாங்கள் பணியாற்றினோம்.

நாங்கள் இந்தியா மற்றும் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த ஏனைய தரப்புடன் நெருங்கிய செயற்பட்டோம். நாம் வெற்றி பெற்றிருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே அரசு அனுசரணையாளராக செயற்பட்டதுடன் எரிக் சொல்ஹெய்ம் பிரதான சமாதான தூதுவராக செயற்பட்டார்.