நிபந்தனையின் கீழ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கியுள்ள மிகப் பெரிய பலத்திற்கு அமைய அரசாங்கம் தனது வேலைகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த பலத்தை வழங்கியுள்ளனர்.

இதனால், நாங்கள் அரசாங்கத்தின் காலை பிடித்து இழுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.

வேலைகளை செய்வதற்கு அரசாங்கத்திற்கு காலத்தை வழங்க விரும்புகிறோம்.

அரசாங்கம் சரியான வழியில் செல்கிறதா என்பதை அறிய அரசாங்கத்திற்கு காலத்தை வழங்குவோம்.

கிடைத்துள்ள பலத்தை பயன்படுத்தி நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கியும், கொள்ளை, ஊழல் மோசடிகளை நோக்கியும் கொண்டு சென்றால், முதல் நாளிலேயே நாங்கள் வீதியில் இறங்குவோம்.

நாட்டுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை முன்வைத்தால் நாங்கள் ஆதரிப்போம் எனவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.