தேர்தலில் மூன்றில் ஒரு வீத வாக்குகளை இழந்த உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இம்முறை மூன்றில் ஒரு வீதத்தை இழந்துள்ளார் என தெரியவருகிறது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 818 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார்.

எனினும் இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்ட கம்மன்பில ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 331 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனடிப்படையில் உதய கம்மன்பல கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 62 ஆயிரத்து 487 வாக்குகள் அதாவது 3.1 வீத வாக்குகளை குறைவாக பெற்றுள்ளார்.