சஜித் அணியினர் விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த தயார்! ருவான் விஜேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் மீண்டும் இணைவது தொடர்பாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

களனியில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்ப்போம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அவர்கள் இணையும் தேவை இருக்குமாயின் பேச்சுவார்த்தை நடத்திப் பார்ப்போம்.

எனினும் எங்களுக்கு தற்போது அப்படியான அழைப்புகள் விடுக்கப்படவில்லை. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்த செல்லவில்லை.

எதிர்காலத்தில் நாட்டுக்காக அப்படியான பேச்சுவார்த்தை அவசியம் என்றால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முன் வருவோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி கிடைத்தால் பெற்றுக்கொள்வீர்களாக என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ருவான் விஜேவர்தன,

செயற்குழு மாத்திரமல்லாது கட்சியில் உள்ள சகல உறுப்பினர்களும் இணங்கி, கட்சியின் தலைவர் பதவியை வழங்கினால், அதனை ஏற்று கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.